மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "தீர்வு — நாமக்கல் மாவட்ட குறை தீர்வு டிஜிட்டல் சேவை" மூலம் நாமக்கல் மாவட்ட மக்கள் பெற்ற தீர்வுகள், அவர்களின் சொந்த வார்த்தைகளில்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம், அண்ணன் சீர் திட்டம், மருத்துவ காப்பீடு உயர்வு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம், வெற்றி திறன் பயிற்சி திட்டம், TN-VETRI கிராமப்புற மறுமலர்ச்சி திட்டம், வெற்றி வீடுகள் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக நல்லாட்சி நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நாமக்கல் மாவட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு எளிதில் தீர்வு காணும் வகையில் கடந்த 15.06.2026 அன்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திருமதி விஜயலக்ஷ்மி சின்னசாமி அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள் ஆகியோர் தீர்வு - நாமக்கல் மாவட்ட குறை தீர்வு டிஜிட்டல் சேவையினை தொடங்கி வைத்தார்கள்.
இந்த செயலியானது நாமக்கல் மாவட்ட மக்கள் தங்களது கோரிக்கைகளை ஒரு தனி நபர் இருந்த இடத்திலிருந்து QR SCAN முறையில் பதிவிடும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தாங்கள் அனுப்பும் கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேரடிப் பார்வையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம், சமூக நலத்துறை, ஆதி திராவிடர் நலன், பிற்படுத்தப்பட்டோர் போன்ற பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் 15 நாட்களுக்குள் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடிநீர், சாலைகள், பட்டா முதல் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் விரைவான மற்றும் வெளிப்படையான தீர்வு
குடிநீர் விநியோகம், குழாய் கசிவு மற்றும் குடிநீர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வு.
சாலை சேதம், பள்ளங்கள் சீரமைப்பு மற்றும் புதிய சாலை அமைத்தல்.
பட்டா மாற்றம், திருத்தம், சிட்டா, அடங்கல் மற்றும் பிற நில ஆவண சேவைகள்.
துல்லியமான நில அளவை, எல்லைப் பிரச்சினைகள் மற்றும் எல்லை நிர்ணயம்.
அரசு மற்றும் பொதுக் கட்டிடங்களின் உடனடிப் பராமரிப்புப் பணிகள்.
மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் மேம்பாடு.
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் குறைகளை விரைவாகவும் திறமையாகவும் தீர்க்க அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. உங்கள் நம்பிக்கை எங்களை தினமும் சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.
காணொளி மற்றும் QR படிவம் மூலம் பெறப்பட்ட கருத்துகள்
எனக்கு ரெண்டு வருஷமா இந்த amount வந்து எனக்கு வரவே இல்ல. இன்னைக்கு காலையில சாலை விபத்து நிவாரணத் தொகை ஐம்பதாயிரம் ரூபாய் ready ஆயிருச்சு. call பண்ணி சொன்னாங்க. தமிழக நம்ம முதலமைச்சர் அய்யா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். என்னோட name சங்கீதா. நான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பக்கத்துல செல்லாண்டியமான் street-ல இருக்கேன். என்னோட கணவர் வந்து ஒரு சாலை விபத்துல ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அடிபட்டாங்க. அதுக்கான நிவாரணத் தொகை ஐம்பதாயிரம் ரூபாய் வந்து எனக்கு ரெண்டு வருஷமா வரவே இல்ல. அவர் கரூர்ல அடிபட்டாரு. அதனால கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நான் நிறைய முறை அலைஞ்சிருக்கேன். இந்த amount வந்து எனக்கு வரவே இல்ல. தீர்வு அப்படிங்கிற ஒரு app இருக்கு. அந்த app-ல வந்து நம்மளோட கோரிக்கைகளை நாம தெரிவிச்சோம். மனுவா கொடுத்தோம் அல்லது தெரிவிச்சோம் அப்படின்னா அதுக்கான தீர்வு கிடைக்கும் அப்படிங்கிறதை நான் பார்த்தேன். உடனே என்னோட கோரிக்கைகளை தெரிவித்திருந்தேன். கரெக்டா ten days-ல இன்னைக்கு காலையில உங்களோட கணவரோட சாலை விபத்து நிவாரணத் தொகை ஐம்பதாயிரம் ரூபாய் ready ஆயிருச்சு.
உங்கள் நம்பிக்கையே எங்கள் பலம், உங்கள் மகிழ்ச்சியே எங்கள் இலக்கு